Wednesday, March 26, 2014

பேராசிரியர் வெள்ளை வாரணனாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

வெள்ளை வாரணனார் 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழிசைப்பணியில் இருந்தார்.  இவர் எழுதியவற்றுள் "இசைத் தமிழ்' ஓர் அரிய நூல்.

திருநாகேஸ்வரத்தில் கந்தசாமி-அமிர்தம் அம்மையாருக்குப் பிறந்த இவர் திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ந்தவர். 62 வயது வரை அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிப் பின்னர் 1979 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாலும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக 1979 முதல் 1982 வரை பணியாற்றினார்.

1988 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/sy

பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-2.htm


01.  அற்புதத் திருவந்தாதி
02.  இசைத்தமிழ்
03.  காக்கை விடு தூது
04.  பன்னிரு திருமுறை வரலாறு
05.  பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி
06.  சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
07.  சங்ககாலத் தமிழ் மக்கள்
08.  தில்லைப் பெருங்கோயில் வரலாறு
09.  திருமந்திர அருள்முறைத் திரட்டு
10.  திருத்தொண்டர் வரலாறு
11.  திருவருட்பாச் சிந்தனை
12.  திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
13.  தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு
14.  தொல்காப்பியம் களவியல் உரைவளம்
15. தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
16. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்
17. தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்
18. தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம்
19. தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்
20. தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்
21. தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்
22.  தொல்காப்பியம் வரலாறு
23.  திருவருட் பயன்
24. தொல்காப்பியம்-செய்யுளியல் உரைவளம்
25. தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்
26. கவிதை நூல்கள்

No comments:

Post a Comment