Sunday, April 13, 2014

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் ---1

வணக்கம்.

திருவாவடுதுறை மடத்திற்கு நான் நேரில்  சென்றிருந்த போது அங்குள்ள சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள தல புராண நூல்களின் பட்டியல் ஒன்றினை காண நேரிட்டது. கோயில் தொடர்பான பல நூல்களின் பெயர் வரிசைகள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்துப் பிரதியாக இருந்த இத்தகவலை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்ய அனுமதி பெற்று ஒவ்வொரு பக்கங்களையும் மின்னாக்கம் செய்து வந்தேன். இப்பக்கங்கள் தற்சமயம் நண்பர்கள் திரு. அன்பு ஜெயா, திரு ரிஷி ரவீந்திரன் ஆகிய இருவரால் தட்டச்சு செய்யப்பட்டு வருகின்றன. 

இந்தப் பட்டியலில் உள்ள புராண நூல்களில் பெரும்பாலானவை திருவாவடுதுறை மடத்தில் இருப்பவை . இவற்றுள் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய தலபுராணங்களும் அடக்கம். 

தலபுராணங்களைப் பற்றிய மேலதிக ஆய்வு செய்ய விரும்புவோருக்கு உதவும் பொருட்டும் இந்த நூல்களை தேடி மின்னாக்கம் செய்ய இந்த பட்டியல் உதவலாம் என்ற நம்பிக்கையும் மனதில் தோன்றியதால் இப்பட்டியலை அப்போது மின்னாக்கம் செய்து வந்தேன்..நண்பர்கள் திரு. அன்பு ஜெயா, திரு ரிஷி ரவீந்திரன் ஆகிய இருவரின் உதவியால் இது தட்டச்சு செய்யப்பட்டு இணையத்தில் இடம்பெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு காரியம் தானே!. இவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.  மேலும் இப்பட்டியலை தட்டச்சு செய்ய விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொண்டால் இப்பணியை விரைவில் செய்து முடிக்க அது உதவும். 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களின் பெயர் பட்டியல் இதில் உள்ளது. ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கின்றோம். 

குறிப்பு:
இந்தப் பட்டியலில் வரும் முதல் குறிப்பு எண்கள் நூலில் இருந்தபடியே இங்கே வழங்கப்படுகின்றன. எண்கள் மாறி .. இடையில் சில எண்கள் விடுபட்டு வருகின்றன. சில நூல்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை வருகின்றன. இப்படி இருப்பவை ஒன்றுக்கும் மேற்பட்ட அதே தலைப்பிலான ஒரே நூல்கள் அல்லது வெவ்வேறு நூல்களாகும். இது பிறகு உறுதி செய்யப்பட வேண்டும்.

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]





ஸ்ரீ சரசுவதி மகால் நூலகம் - ஆய்வு மையம்

திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை


தல புராணங்கள்

01. கோயிற் புராணம்
02. திருமுல்லைவாயிற் புராணம்
03. காசியாரணிய மகாத்மியம்
04. திருநல்லூர்ப் புராணம்
05. திருவதிட்டகுடி புராணம்
06. சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம்
07. தாருகாபுரதல புராணம்
08. சிவ ரகசியம் பகுதி-1,2
09. கடம்ப வன புராணம்
10. பிரமோத்ரகாணம்
11. திருவிளையாடற் புராணம்
13. திருக்குடந்தைப் புராணம்
14. மண் சுமந்த திருவிளையாடல்
15. சிவரகசியம்
17. மண் சுமந்த திருவிளையாடல்
19. திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம்
21. சுந்தர பாண்டியம்
23. தாருகாபுரத் தல புராணம்
24. தாருகாபுரத் தல புராணம்

25. திருப்பெருந்துறைப் புராணம்.
27. திருவாரூர் புராணம்
28. திருவாரூர் புராணம்
30. திருப்பரங்கிரிப் புராணம்
31. திருமழபாடிக் கோயில் வரலாறு
32. திருக்குடந்தை புராணம்
33. திருநாகைக் காரோணப் புராணம்
34. திருநாகைக் காரோணப் புராணம்
35. திருநாகைக் காரோணப் புராணம்.
37. சேது புராணம் + சேது புராண வசனம்
38. சேது புராணம்
39. பயறணீச்சுரர் தலபுராணம் (உடையார்பாளையம்)
40. பயறணீச்சுரர் தலபுராணம்(உடையார்பாளையம்)
42. திருவிடையூர் தலபுராணம்
43. திருவிடையூர் தலபுராணம்
45. மருதவனப் புராணம்
46. மருதவனப் புராணம்
49. மருதவனப் புராணம் (பாகம் 2)
54. திரிகோணமணிப் புராணம் (திருங்கை)
49 அம்பைத் தலபுராணம்
50.அம்பைத் தலபுராணம்
53.திருக்கோவலூர் புராணம்
54 -
55.திருச்சுழியூர் புராணம்
56.திருமலைத் தலபுராணம்
57.திருமழுவாழப்புராணம்
58.வள்ளியூர் ஸ்தலபுராணம்
59.அன்னியூர் தலபுராணம்
60.சங்கர நாராயணக்கோயில் புராணம்
61.திரு உத்தரகோச மங்கைப்புராணம்
62.திரு உத்தரகோச மங்கைப்புராணம்
63.வேதாரண்யப் புராணம்
64.வேதாரண்யப் புராணம்
65.வேதாரண்யப் புராணம்
66.வேதாரண்யப் புராணம்
67.தீர்த்த கிரி புராணம்
69.திருவாட் போக்கிப்புராணம் (இரத்தினகிரி)
70.திருக்கருவை தலபுராணம்
71.சுசீந்திரத்தலபுராணம்
72.ஆச்சாபுரத் தலபுராணம்
73.ஆச்சாபுரத் தலபுராணம்
75.பவானி புராணம்
76.கோயிலூர்ப்புராணம்
77.திருவதிகைப் புராணம்
78 -
79.சூதவனப் புராணம் (திருவுசாத்தானம்)
80.சூதவனப் புராணம் (திருவுசாத்தானம்)
81.திருப்போரூர் புராணம்
82.திருப்பேரூர் புராணம்
83.திருப்பேரூர் புராணம்
86.திருக்குற்றாலத் தலபுராணம்
87 -
88.திருக்குற்றாலத் தலபுராணம்
89.திருக்குற்றாலத் தலபுராணம்
90.திருக்குற்றாலத் தலபுராணம்
90A திருக்குற்றாலத் தலபுராணம்
91.மாயூரப்புராணம்
92.மாயூரப்புராணம்
93.தேவதாருவனத் தலபுராணம்
94.அம்பைத் தலபுராணம்
95.திருவானைக்காபுராணம்
96.திருவானைக்காபுராணம்
97.திருவானைக்காபுராணம்
98 -
99.திருவானைக்காபுராணம்
100. திருக்காளத்தி புராணம்


பட்டியல் தொடரும்.

1 comment:

  1. மின்னாக்கம் செய்ய எனக்கு விருப்பம். தயவு செய்து vasum_b@yahoo.co.in ல் தொடர்பு கொள்ளவும்.
    Vasumathy














    ReplyDelete