Wednesday, April 9, 2014

புலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

புலவர் கா.கோவிந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்



[நன்றி: http://muelangovan.blogspot.in]


புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915[1] - ஜூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும் துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

புலவர் கோவிந்தனின் பெற்றோர் காங்கேய முதலியார் - சுந்தரம் அம்மையார் ஆவர். அவரது குடும்பம் நெசவும் உழவும் செய்து வந்தது. கோவிந்தன் செய்யாற்றில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேறினார். 1940 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்வான் பட்டம் பெற்றார். 1941 இல் சேலத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

சிறுவயது முதல் தனித்தமிழ் இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அதில் இணைந்தார். 1952 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளருக்காக செய்யாறு பகுதியில் பிரச்சாரம் செய்தார். 1958 இல் திருவத்திபுரம் (செய்யாறு) பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சட்டமன்றத் தேர்தலில் செய்யாறுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967, 1971 மற்றும் 1977 தேர்தல்களிலும் அதே தொகுதியிலிருந்து திமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றார். 1967-69 இல் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பணியாற்றினார். 1969-71 மற்றும் 1973-77 காலகட்டங்களில் சட்டமன்றத் தலைவராகப் பணியாற்றினார். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.[http://ta.wikipedia.org/s/qtm]




01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.







1 comment:

  1. அவர் தந்தை பெயர் காங்க முதலியார். அவர் பணிபுரிந்த பள்ளி, வேலூர் வெங்கடேசுவரா பள்ளி.

    ReplyDelete