Thursday, April 10, 2014

திரு.சி.பி.சிற்றரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

திரு.சி.பி.சிற்றரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.

இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.[http://ta.wikipedia.org/s/nv]


No comments:

Post a Comment