Thursday, April 10, 2014

கவிஞர் பெரியசாமி தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்



பெ.தூரன் என்னும் பெரியசாமித் தூரன் அவர்கள் பழனிவேலப்பக் கவுண்டர்--பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாக 1908 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள மஞ்சக்காட்டு வலசு என்னும் ஊரில் செப்டெம்பர் 26 ஆம் நாள் பிறந்தார்.  பள்ளி இறுதி வகுப்பு வரை ஈரோட்டில் படித்த இவர் கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். ஆனால் பட்ட வகுப்புத் தேர்வு எழுதவில்லை. சிறு வயதில் இருந்தே கதர் ஆடை அணிவதில் விருப்பம் கொண்ட இவர் பாரதியின் பாடல்களைப் பரவலாக்குவதில் ஈடுபட்டார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக் களஞ்சியத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளை 1976 வரை வெளியிட்டார்.  1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள் மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/9y7

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-11.htm


கவிஞர் பெரியசாமித்தூரன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. நவமணி இசைமாலை
02. மின்னல் பூ
03. இளந்தமிழா
04. தூரன் கவிதைகள்
05. நிலாப் பிஞ்சு
06. ஆதி அத்தி
07. அழகு மயக்கம்
08. பொன்னியின் தியாகம்
09. காதலும் கடமையும்
10. மனக்குகை
11. சூழ்ச்சி
12. இளந்துறவி
13. தூரன் எழுத்தோவியங்கள்
14. பிள்ளைவரம்
15. மா விளக்கு
16. உரிமைப் பெண்
17. காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத்
 தொகுதி)
18. காலச் சக்கரம் (பத்திரிகை)
19. தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
20. தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
21. இசைமணி மஞ்சரி
22. முருகன் அருள்மணி மாலை
23. கீர்த்தனை அமுதம்
24. பட்டிப் பறவைகள்
25. கானகத்தின் குரல்
26. கடல் கடந்த நட்பு
27. பறவைகளைப் பார்
28. தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
29. மோகினி விலாசம்
30. அருள் மலை நொண்டி
31. காட்டு வழிதனிலே
32. பூவின் சிரிப்பு
33. தேன் சிட்டு
34. காற்றில் வந்த கவிதை
35. பாரதியும் பாரத தேசமும்
36. பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
37. பாரதியும் பாப்பாவும்
38. பாரதித் தமிழ்
39. பாரதியும் கடவுளும்
40. பாரதியும் சமூகமும்
41. பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
42. பாரதியும் தமிழகமும்
43. பாரதியும் உலகமும்
44. பாரதியும் பாட்டும்
45. மனமும் அதன் விளக்கமும்
46. கருவில் வளரும் குழந்தை
47. குமரப் பருவம்
48. பாரம்பரியம்
49. பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
50. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
51. அடி மனம்
52. நல்ல நல்ல பாட்டு
53. சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
54. மழலை அமுதம்
55. நிலாப்பாட்டி
56. பறக்கும் மனிதன்
57. ஆனையும் பூனையும்
58. கடக்கிட்டி முடக்கிட்டி
59. மஞ்சள் முட்டை
60. சூரப்புலி
61. கொல்லிமலைக் குள்ளன்
62. ஓலைக்கிளி
63. தரங்கம்பாடித் தங்கப் புதையல்
64. நாட்டிய ராணி
65. மாயக்கள்ளன்
66. தம்பியின் திறமை

No comments:

Post a Comment