Saturday, April 5, 2014

காசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

காசி ஆனந்தன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

[http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-88.htm]


 [from: dravidaperavai.org.in]

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (பிறப்பு: 1938, மட்டக்களப்பு, இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர். (http://ta.wikipedia.org/s/co1)


No comments:

Post a Comment