Wednesday, April 13, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 1)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 1)  வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின் முதல் பகுதியின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 1)
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் திருவரிஞ்சியீச்வரம் ... ]

2. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம் பிள்ளை
[அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்க சென்னை சட்டசபையில் மசோதா கொண்டுவரப்படுகிறது, அண்ணாமலையார் 20 இலட்சம் நன்கொடை தர முன்வந்துள்ளார், அதில் தமிழ்ப் பல்கலைக் கழகம் விரைவில் தோன்ற விருப்பம் தெரிவிக்கும் பதிவு]

3.  துயரங்கள்
[மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு ரா. இராகவையங்கார் இரங்கற்பா எழுதியுள்ளார், இராவ்பகதூர் ஸ்ரீனிவாசப் பிள்ளை மறைவுச் செய்தி ]

4. இன்பப்பேறு (தொடர்ச்சி...)
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[இலக்கியங்களில் எவையெவை இன்பம் என்று கூறப்படுகின்றது என்பதன் தொகுப்பு]

5. தமிழர் நல்லிசைப் புலமை
--V. சண்முகம் செட்டியார்
[இசைத்தமிழ், இலக்கணம், நுண்கலைகள் பற்றிய ஒரு பார்வை]

6. திருச்சுழியல் வெண்பா அந்தாதி
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

7. உடல் இயலும் உடல் நல வழியும்
--?? பெயர் கிடைக்கவில்லை
[அறிவியல் பாடங்களுக்கான கலைச் சொற்கள் தேவை பற்றிய கட்டுரை, உயிரியல் பாடநூல் என்னும் அளவிற்கு செய்திகள் கொடுக்க்கப்பட்டுள்ளன.  பல உயிரியல் கலைச்சொற்கள்  காணக் கிடைக்கின்றன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment