Friday, April 22, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 1



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 1

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 1


1. புத்தாண்டு வாழ்த்து
-திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[தமிழ்ப் பொழிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கமும் வாழ்க வளர்கவெனப் பாடும் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. சைவ உணவுக்கு மாறான சில கொள்கைகளின் மறுப்பு
--மறைமலையடிகள்
[ 33 பக்கங்களுக்குத்  தாவர உணவை உண்ணும் வகையில் மனிதரின் உடற்கூறியல் இருப்பதாக அறிவியல் தகவல்களை முன்வைத்து புலால் உணவை விலக்கச் சொல்லும் கட்டுரை]

3. அறிவுடை மறுமொழி
-- அ. கந்தசாமிப் பிள்ளை, குடந்தை அரசுக் கல்லூரி
[இளைஞர் பக்கம்: அறிவுக் கூர்மையுடன் கற்றோர் ஒருவருக்கொருவர் கூறும் மறுமொழிகள் அனைவரும் கேட்டு இன்புறும் வகையில் அமைவதற்கு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன]

4. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
--L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர்  மீது ஓட்டக்கூத்தரினால் பாடப்பெற்ற குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம்]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]



No comments:

Post a Comment