Saturday, April 23, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 2

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 2

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 2


1. தமிழரும் ஆடையும்
-- வீ. உலகவூழியர்
[முற்காலத் தமிழரின் நெசவுத் தொழில் வளர்ச்சியும் இன்றைய நிலையும், இலக்கியங்களின் வழி ஓர்  ஒப்பீட்டாய்வுக் கட்டுரை]

2. உள்ளம்
-- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[உள்ளம் என்பது யாது?  உள்ளத்தின் இருப்பிடம் மூளை, நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் கட்டுரை]

3. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை,  தொல்லியல் தகவல் மூலம்  நாமறியும் இடைக்காலப் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. அடம்பும் கடம்பும்
-- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சங்க இலக்கியம் காட்டும் அடம்பு என்பது குதிரைக் குளம்படியிலைக் கொடி, horse-hoof creeper, அடுத்த இதழில் 'கடம்பு' பற்றிய ஆய்வு தொடரும்]

5. மதுரைக் காஞ்சியாராய்ச்சி  (தொடர்ச்சி...)
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[வாணிபநலன்,  விழவு நலன், சொற் பொருணலங்களை பிற நூல்களுடன் ஒப்பாய்வு ...இது ஒரு தொடர் கட்டுரை]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment