Wednesday, April 27, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 6

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 6

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5   மலர்: 6
________________________________________________

1. தொல்காப்பியச் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[முன்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் "பேராசிரியர் உரை"  என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டு,  தெய்வச்சிலையார் உரை என்று பின்னர் குறிப்பிடப்பட்ட உரை மீது மீள் பார்வை. யார் எழுதிய உரை அது? தெய்வச்சிலையார் என்ற உரையாசிரியர் பற்றி முன்னர் யாரும் அறிந்திலர்.  ஆய்வுக் கட்டுரையில் தொல்காப்பிய உரையாசிரியர் கருத்துகள் ஒப்பிடப்படுகின்றன.  தமிழிலக்கிய உரையாசிரியர்களின்  காலவரிசை இளம்பூரணார்,   சேனாவரையர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் என விளக்கப்படுகிறது. தெய்வச் சிலையார் பற்றிய கால ஆராய்ச்சி. தெய்வச் சிலையார் இளம்பூரணாருக்கும் சேனாவரையருக்குமிடைபட்டவர். சேனாவரையர் உரை பெரிதும் மதிக்கப்பட்டதால் இதுநாள் வரை தெய்வச்சிலையார் உரை வெளிவராதிருந்தது ]

2. திருவள்ளுவர் திருக்குறள்
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.]

3. சில புதுமைகள்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மு. இராகவையங்கார் எழுதிய, கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக அமைந்த சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் கட்டுரை ஆசிரியர் கண்ட புதுமைகளைத் தொகுத்து வழங்குகிறார், இது ஒரு தொடர் கட்டுரை ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment