Wednesday, May 25, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 7

_________________________________________________________

1. மண்ணுலகம்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[புவியின் தோற்றம், உருவம், கால மாறுதல், பருவ மாறுதல், அண்டம் ஆகியன பற்றிய அறிவியல் செய்திகள் வரலாற்றுப் பார்வையுடன் கொடுக்கப்படுகிறது]

2. தாய் மொழித் தொண்டு - சிவப்பிரகாசம் பிள்ளையின் சொற்பொழிவிலிருந்து
சிவப்பிரகாசம் பிள்ளை
[செய்யுள் - தமிழ்த் தொண்டு புரிய வேண்டுகோள் விடுத்த உரை செய்யுள் வடிவில் .. ]

3. மனோன்மணீயமும் மதுரமொழிகளும்
எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை
[மனோன்மணீயத்தில் இடம் பெற்ற, நூற்றைம்பதுக்கும்  மேற்பட்ட அரும் பெரும் பழமொழிகளும், பொருண்மொழிகளும், உவமங்களும், மதுர மொழிகளும் இடம் பெற்ற   வரிகள்  பட்டியலிடப்பட்டு  இலக்கிய நயம் பாராட்டப்படுகிறது.

4. மறுப்பு முறை
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு, சோமசுந்தரம் பிள்ளை சார்புநிலையின்றி நூலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆராய முற்படும் பொழுது வேதாலசய்யர் இடையிடுவது முறையன்று; அது தருக்க நெறிக்கு ஒவ்வாத செயல். அத்துடன், சாத்திரியாரின் உரைநடையை விமர்சிப்பது சரியல்ல என்று கூறுவதும் பொருத்தமல்ல; இலக்கண ஆராய்ச்சிக்கு எத்துணை அறிவு வேண்டுமோ, அத்துணை அறிவு தனது ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதிலும் தேவை. நூலாசிரியரான  சாத்திரியாரின் கருத்தறியாது  வேதாலசய்யர் மறுப்பெழுதத் துவங்குவதும் சரியல்ல  எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்]

5. தமிழ்ச் செய்திகள்
[தமிழ் வித்துவான் தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு தமிழ்ப்பரிசு, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி விழா செய்திகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையின் ஒரு பகுதி என அக்கால நடப்புச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment