Wednesday, June 1, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 2

_________________________________________________________

1. திருக்கோவலூர் ஆதீனம் சிவசண்முக மெஞ்ஞான சிவாசாரியார் சுவாமிகளின் 60 ஆண்டு நிறைவு விழா
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஜூன் 1933 இல் நடந்த விழாவில் பங்கு பெற்ற தமிழ்ப் பெரியோர்களும், அவர்களது உரைகளைப் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வுகளும் தொகுத்தளிக்கபட்டுள்ளன]

2. திருக்கோவலூர் ஆதீனத்தின்  60 ஆண்டு நிறைவு விழாவில்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வாசித்தளித்த வாழ்த்து
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஆண்டு நிறைவு விழாவில்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்]

3.  திருக்கோவலூர் ஆதீனத்தின்  60 ஆண்டு நிறைவு விழாவில்  ந. மு. வேங்கடசாமி நாட்டார்  வாசித்தளித்த வாழ்த்து
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[ஆண்டு நிறைவு விழாவில்  ந. மு. வேங்கடசாமி நாட்டார் வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்]

4. தம்பிரான்றோழர் தேவாரம் (தொடர்ச்சி...)
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்களின் (தேவாரம் - ஏழாம் திருமுறை) மீது அடியார், திருமால், நஞ்சு, மறை, தேவாரச் சிறப்பு என ஐந்து தலைப்புகளில்  இலக்கிய ஆய்வு நிகழ்த்துகிறார் இக்கட்டுரையின்  ஆசிரியர், கட்டுரையின் இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிடும் அடியார்களைப் பற்றியக் குறிப்புகள் தொடர்கின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. திருவைகாவூர்ச் சிவாலயத்திலுள்ள கல்வெட்டுகள்
கு. சோமசுந்தர தேசிகர்
[ கும்பகோணம் நகரின் அருகில், கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம். முதலாம் குலோத்துங்கனால் கற்றளியாக்கப்பட்ட இக்கோவில், சம்பந்தரால் பாடப்பெற்ற பழமையும் கொண்டது.    குலோத்துங்கன் கால ஆலய அமைப்பு பற்றி விவரிக்கும் நோக்கிலும், பல்லவர் மற்றும் சோழர் காலக் கல்வெட்டுத் தகவல்களை அறியத் தரும் நோக்கிலும் கட்டுரையை வழங்குகிறார் சோமசுந்தர தேசிகர்]

6. ஓர் இந்தியப் பேரறிஞர் (தொடர்ச்சி...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
['ஆசியா' என்ற பத்திரிக்கையில் முன்னர் வெளிவந்த, ஜகதீச சந்திரபோஸ் அவர்களைப் பற்றி  நடுநிலையுடன் எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட  கட்டுரையொன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, குறிப்பு: போஸ் என்ற பெயரை 'வசு' என்று ஸ்ரீநிவாஸாச்சாரியார் குறிப்பிடுகிறார். இக்கட்டுரை நிறைவு பெற்றது]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[திருச்சி பிஷப் ஹீபர் கலூரியில் நடைபெற்ற 'திருச்சிராப்பள்ளி பண்டிதர் மகாநாடு' பற்றியக் குறிப்பும், அவ்விழாவில்  ஆசிரியர்கள் தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கல், பயிற்சிக்கான உதவிச் சம்பளம் வழங்கல் போன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட செய்திகளும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்  நடைபெற்ற சேக்கிழார் விழா குறித்த  செய்திகளும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment